மாத்திரையே உணவாக இருந்தது... கடந்த ஆண்டில் தாக்கிய Myositis நோய்! சமந்தா உருக்கம்
நடிகை சமந்தா அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நிலையில், தற்போது உருக்கமான பதிவு ஒன்றினை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கு தற்போது ஹிந்தி என இந்தியளவில் டாப் நடிகையாக ஜொலித்து வருபவர் சமந்தா. இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் திருமணம் நடைபெற்றது.
காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழந்தனர். இதன்பின், கருத்து வேறுபாடு காரணமாக நடிகை சமந்தா - நாகசைதன்யா இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர்.
விவாகரத்துக்கு பின் மயோசிட்டிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது அதிலிருந்து மீண்டு வந்து, பழையபடி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
மயோசிடிஸ் என்ற தசையுருக்கி நோய்க்கு சிகிச்சையளித்து கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்திருக்க முடியும், முழுமையான தீர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தாவின் உருக்கமான பதிவு
செர்பியாவில் உள்ள பழமையான சர்ச் ஒன்றுக்கு சென்ற சமந்தா அதன் புகைப்படங்களை பகிர்ந்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், மயோசிடிஸ் எனும் கொடிய நோயால் அவதிப்பட்ட தனக்கு கடந்த ஒரு வருடம் பெரிய போராட்டக்களமாகவே இருந்தது. தனது உடம்பிற்குள் பல போராட்டங்கள்... உப்பு, சர்க்கரை, பருப்பு வகைகளை கூட தன்னால் எடுத்துக்கொள்ள முடியாமல் வெறும் மாத்திரைகளை மட்டுமே உணவாக பல நேரங்களில் எடுத்துள்ளேன்.
தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொண்டது மட்டுமின்றி தொழில் முறையிலும் சந்தித்த சில தோல்விகள் தன்னை மிகப்பெரிய அளவில் பாதித்ததாக கூறியுள்ளார்.
ஓராண்டு கால பிரார்த்தனை, பூஜைகள், எந்தவொரு பரிசையும் எதிர்பார்த்து கடவுளை பிரார்த்திக்கவில்லை. மன வலிமைக்காகவும் அமைதிக்காகவும் தான் எனது பிரார்த்தனைகள் இருந்தன. மிகப்பெரிய வெற்றி தனக்கு அவசியமில்லை... தான் முன்னோக்கி நகர்வதை தான் எனக்கு கிடைத்த வெற்றியாக பார்கப்பதாக கூறியுள்ளார்.
வாழ்க்கையில் எல்லா நேரத்திலும் நாம் நினைப்பது எல்லாம் நடக்காது என்பதை கற்றுக்கொடுத்ததே கடந்த ஆண்டுதான்... அதுமட்டுமில்லாமல் சிலவற்றினை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மீதி உள்ளவற்றை விட்டுவிட வேண்டும் என்பதை புரிந்து கொண்ட ஆண்டும் அதுவே என்று பதிவிட்டுள்ளார்.