சிம்பிளாக நடந்த சமந்தாவின் வளைகாப்பு... குழந்தை எப்போது பிறக்கும்னு தெரியுமா?
நடிகை சமந்தாவின் வளைகாப்பு விழா மிகவும் சிம்பிளாக நடைபெற்ற நிலையில், புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நிலையில், தற்போது சினிமாவிலிருந்து ஓய்வு எடுப்பதாக கூறியிருந்தார்.
ஆம் சமந்தா கர்ப்பமாக இருக்கும் நிலையில், கடந்த செவ்வாய்கிழமை குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடைபெற்றுள்ளது.

நடிகை சமந்தா தனது மாமியாருடன் இருந்த நெகிழ்ச்சியான தருணங்களை புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.
சமந்தா கர்ப்பமாக இருக்கும் விடயத்தினை கடந்த ஜுன் மாதம் எங்கள் தங்கம் பட வெற்றிவிழாவில் தான் தெரியவந்தது. அப்போதே சந்தேகத்தில் காணப்பட்ட ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வந்தனர்.

கடைசியாக சமந்தாவே அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தியுள்ளார். வளைகாப்பு விழா குறித்து சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், சமூக வளைதளங்களில் புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் வரும் டிசம்பர் மாதம் சமந்தாவுக்கு குழந்தை பிறக்கும் எனவும் கூறுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |