தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரியஸ் சர்ச்சை.. முதன் முறையாக ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய நடிகை சமந்தா!
நடிகை சமந்தா நடித்த தி ஃபேமிலிமேன் 2 வெப் சீரியஸானது சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
குறிப்பாக ஃபேமிலி மேன் தொடரில் நடித்த தமிழ் நடிகை சமந்தாவுக்கு கண்டனங்கள் தீவிரமாக எழுந்தன. அதே நேரத்தில் நடிகை சமந்தாவின் நடிப்பு பரவலாக பாராட்டுக்களை குவித்தது.
சமீபத்தில் கூட, மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் இந்த வெப் தொடருக்காக சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார் சமந்தா.
இந்த வெப் தொடரில் நடித்தது குறித்து தொடர்ந்து மௌனம் சாதித்து வந்த சமந்தா முதல் முறையாக சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் இது குறித்து பேசியுள்ளார்.
அதில்... யாருடைய மனதையும் புண் படுத்தவேண்டும் என்கிற நோக்கத்தில் நான் நடிக்க வில்லை.
ராஜி என்கிற கதாபாத்திரத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்தேன். என்னுடைய நடிப்பு யாருடைய மனதையாவது புண் படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்'.