சமந்தாவைத் தொடர்ந்து பிரபல தொகுப்பாளினிக்கு அரிய நோய் பிரச்சினையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகை சமந்தாவைப் போன்று பிரபல தொகுப்பாளி டிடி-க்கு Autoimmune பிரச்சினை இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா சமீபத்தில், இன்ஸ்டாகிராம் பதிவில் தான் ஒரு அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் பயங்கர அதிர்ச்சியில் காணப்பட்டதுடன் பிரபலங்கள் பலரும், விரைவில் குணமடைய தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆம் மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் அவதிப்படும் நிலையில், டிடி அவருக்கு போட்ட பதிவினால் தொகுப்பாளினிக்கு டிடிக்கு Autoimmune நோய் தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது.
அதே போன்று நடிகை சமந்தாவை மருத்துவமனையில் வந்து அவரது முன்னாள் கணவர் வந்து பார்ததுவிட்டு சென்றதாகவும், விரைவில் சேர்ந்து வாழ உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவல் தற்போது உண்மையல்ல என்பது தெரியவந்துள்ளது.
தற்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டதாக கூறப்பட்டதுடன், நடிப்பில் இருந்து பிரேக் எடுக்க விரும்பாமல் வேலை பார்ப்பதாக சமந்தா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை டிடி பதிவால் அதிருப்தி
சமந்தாவின் பதிவிற்கு டிடி கொடுத்த பதிலில், என்னைப் போன்று Autoimmune பிரச்சினை இருப்பவர்களுக்கு நீங்கள் ஒரு முன் உதாரணம். நீங்கள் மீண்டு அதே வலிமையுடன் வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
தொகுப்பாளினி டிடிக்கு ஆர்த்ரைட்ஸ் பிரச்சினை இருப்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், சமந்தாவிற்கு உள்ள Autoimmune என்ற நோய் நடிகை டிடிக்கும் இருக்கின்றதாம். ஆனால் அதற்கான சிகிச்சை அவர் இன்னும் எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது.
ஆனால் சமந்தாவிற்கு டிடி ஆறுதல் கூறுகையில், நம்மால் இந்த நோயை வெல்ல முடியும்... இந்நோயினால் போராடும் எல்லோருக்கும் நீங்கள் தான் முன் உதாரணம் என்று கூறியுள்ளார்.
So much love to you from all the auto immune warriors. Come on girl shine brighter for all of us who are fighting auto immune conditions ,be our inspiration, you will win this one too… show it your stronger than that… strength to you @Samanthaprabhu2 https://t.co/l2wlS1JMU6
— DD Neelakandan (@DhivyaDharshini) October 29, 2022