முதலில் நான் மாற வேண்டும்: விவாகரத்து அறிக்கைக்கு பின்பு சமந்தாவின் உருக்கமான பதிவு
விவாகரத்து குறித்து அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது சமந்தா இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகின்றது.
தென்னிந்திய சினிமாவில் பிரபல ஜோடியாக வலம் வந்த சமந்தா, நாகசைதன்யா தற்போது திருமண பந்தத்தில் இருந்து பிரிந்துள்ளனர். இருவரும் பரஸ்பரமாக பிரிவதாக கூறிய நிலையில், இந்த விடயம் சோசியல் மீடியாவினை ஆக்கிரமித்துள்ளது.
தற்போது விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்ட பின்பு மீண்டும் தனது பெயரை சமந்தா என்று மாற்றியுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் Dream & Alec Benjamin என்ற பாடல் வரிகளை பதிவிட்டுள்ளார் அதில் "எனது உலகத்தை நான் மாற்ற வேண்டுமென்றால் முதலில் நான் மாற வேண்டும். எழுந்தவுடன் எனது படுக்கையை நானே சரி செய்ய வேண்டும்.
என்னிடத்தில் படிந்துள்ள அழுக்குகளை நானே சுத்தம் செய்யவேண்டும். நாள்முழுவதும் படுக்கையில் படுத்துக்கொண்டு நான் செய்ய வேண்டிய செயல்களை குறித்து கனவு மட்டும் கொண்டிருந்தால் போதாது" என்று அந்த பாடல் வரிகள் உணர்த்துவதாக உள்ளன. இப்பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.