பயணிடம் திட்டு வாங்கிய இசையமைப்பாளர் ... ஷாக்கான ரசிகர்கள்..!
பயணிடம் திட்டு வாங்கியதாக ‘கைதி’ பட இசையமைப்பாளர் கூறிய தகவல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைதி படம்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, நரேன் நடித்த படம் ‘கைதி’. இப்படத்தை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரகாஷ் பாபு தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்தார். இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்தார்.
இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பை பெற்றுத் தந்தது. வசூல் சாதனையையும் செய்தது. பல படங்களுக்கு தரமான இசையமைத்து இன்று பல பேருக்கு அது பிஜிஎம்மாக பல மேடைகளில் ஒலித்துக் கொண்டிருப்பது இசையமைப்பாளர் சாம் சிஎஸின் பாடல் தான்.
பயணிடம் திட்டு வாங்கிய ‘கைதி’ பட இசையமைப்பாளர்
விக்ரம் வேதா, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், கைதி, ராக்டரி ராமன் விளைவு போன்ற பல படங்களுக்கு இசையமைத்தவர் தான் சாம் சிஎஸ். மீடியாக்களை விரும்பாததால் இவர் அதிகமாக மீடியாக்கள் முன்பு வரமாட்டார்.
ஆனால், அது எவ்ளோ பெரிய தப்பு என்று கட்டத்தில் உணர்ந்துள்ளார் சாம். இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் பேசும்போது, ஒரு தடவை நான் எலக்ட்ரிக் ரயில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது, என் சூட்கேஸ் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரை இடித்து விட்டது.
இதனால் கடும் கோபமான அந்த நபர் என்னை கண்டபடி கெட்டவார்த்தையால் திட்டிவிட்டார். அவர் இறங்கும் போது அந்த நபரின் போன் ஒலித்தது. அதில் ரிங் டோன் என் இசையில் வெளிவந்த ‘விக்ரம் வேதா’ படத்தின் bgm ஒலித்தது.
இதை பார்த்த நான் அப்படியே ஷாக்காகிவிட்டேன். நான் சந்தோஷப்படுவதா? இல்லை வேதனைப்படுவதா? என்று எனக்கு தெரியவில்லை. இதனையடுத்து நான் மீடியா எந்த அளவுக்கு நம்மை வெளியில் பிரபலப்படுத்துகிறது என்று புரிந்து கொண்டேன்.
அந்த நிகழ்விற்கு பிறகு இப்போது மீடியாக்களில் நிறைய பேட்டிகளை கொடுத்து வருகிறேன். அது இன்னும் என்னை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறது என்றார்.