அமெரிக்காவில் வெங்காயம் மூலம் வினோத நோயா? எந்த வெங்காயம் சாப்பிடக்கூடாதுனு தெரிஞ்சிக்கோங்க
அமெரிக்காவில் சால்மோனெல்லா என்ற நோய்க்கு 37 மாநிலங்களில் 650க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெங்காயத்துடன் தொடர்புடைய இந்நோயினால் யாரும் இறக்கவில்லை என்றும், டெக்சாஸ் மற்றும் ஒக்லஹோமாவில் பெரும்பாலானோர் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய் பரவல், மெக்சிகோவின் சிவாவாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முழு சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் வெங்காயங்களிலிருந்து பரவியதாகவும், இந்த வெங்காயங்கள் புரோசோர்ஸ் இன்க் மூலம் அமெரிக்கா முழுவதும் விநியோகிக்கப்பட்டதாகவும் சிடிசி இந்த வாரம் தெரிவித்துள்ளது.
இந்த வெங்காயம் கடைசியாக ஆகஸ்ட் இறுதியில் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், வெங்காயத்தை மாதக்கணக்கில் சேமித்து வைக்கும் வீடுகள் மற்றும் வணிகங்களிலும் இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்னர்.
குறித்த வெங்காயத்தினை யாரும் வாங்கவோ, உண்ணவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஸ்டிக்கர் அல்லது பேக்கேஜிங் இல்லாத முழு சிவப்பு, வெள்ளை அல்லது மஞ்சள் வெங்காயத்தை வெளியே எறியவும் அறிவுறுத்தப்படுகிறது.