ரத்த நாளங்கள் சீராக இருக்க வேண்டுமா? அதற்கு இந்த ஒரு மீன் போதும்
உடலில் எந்த செயற்பாடு நடக்க வேண்டும் என்றாலும் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும்.
ரத்த ஓட்டம் சரியாக இல்லாவிட்டால் உடலில் அது பல பிரச்சனைகளை கொண்டு வரும். இதற்கு நாம் எல்லோரும் உடற்பயிற்சி செய்வதுடன் முறையான உணவுப்பழக்கவழக்கத்தையும் பின்பற்றுவது அவசியமாகும்.
இந்த ரத்த ஓட்டத்தை சீராக்க என்ன வகையாக உணவுகளை அதிகம் உண்ண வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரத்த ஓட்டம்
ரத்தத்தை நாம் எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். இதற்கு நமது உடலில் ஆன்டி ஆக்சிடன்ட் என்ற பதார்த்தம் இருக்க வேண்டும். இது தவிர அலிசின் என்ற பதார்த்தமும் இருப்பது அவசியம்.
நோய்களை எதிர்த்து போராடக்கூடிய சல்பரம் முக்கி பங்கு இதில் வகிக்கிறது. இதற்காக நமது உணவில் நாம் பூண்டை எடுத்து கொண்டால் குறிப்பிட்ட இந்த சத்துக்கள் கிடைக்கும்.
இந்த பூண்டு ரத்த சோகை, ரத்த அழுத்தம், போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய, பூண்டு பேருதவி செய்கிறது. ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்கள், உணவில் நிறைய பூண்டு சேர்த்து கொள்ளலாம்.
நீங்கள் வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சால்மன் மீனை சேர்த்து கொள்வது அவசியம். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன.
இதனால் ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டம் சீராக ஓட உதவும். உணவில் மஞ்சள் சேர்த்து கெள்ளலும் மிகவும் அவசியமாகும்.
இதிலுள்ள குர்குமின் என்ற பொருள் ரத்த நாளங்களிலுள்ள கசடுகளை நீக்கி, ரத்த நாளங்களின் பாதுகாப்பிற்கும் உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |