நிகழ்ச்சி மேடையில் திடீரென்று சட்டையை கழற்றிய சல்மான் கான்... ஷாக்கான நடிகைகள்!
நிகழ்ச்சி மேடையில் திடீரென்று சட்டையை கழற்றிய சல்மான் கானின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திடீரென்று சட்டையை கழற்றிய சல்மான் கான்
பாலிவுட்டில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் சல்மான் கான். 57 வயதான நிலையிலும் இன்றும் பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஹீரோவாக ஆட்டிப்படைத்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற கிஸி கி பாய் கிஸி கி ஜான் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர் சல்மான் கான் திடீரென சட்டையை கழற்றினார்.
ஏன் அப்படி செய்தார் என்றால், படத்தில் அவர் காட்டும் Six Packs எல்லாம் வெறும் கிராபிக்ஸ் காட்சிகள் என்று விமர்சனம் வந்த நிலையில்,
நிகழ்ச்சி மேடையில் சட்டையை கழற்றி “இதை பார்த்தால் VFXல் வந்தது போல தெரிகிறதா?” என்று அவர் கேள்வி எழுப்பவே, ரசிகர்கள் சல்மான் கானின் கட்டழகைப் பார்த்து பிரமித்து ஆரவாரம் செய்தனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து வைரலாக்கி வருகின்றனர்.
He is raising the bars ?#SalmanKhan bhai take a bow ? pic.twitter.com/tD2Z0gziA3
— ?UTKARSH?| Fan account (@BEINGRADHE2727) April 11, 2023