பிரதமர் நரேந்திர மோடியின் சம்பளம் மற்றும் சொத்து விபரம் தெரியுமா?
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில் இவரது சம்பள விபரம் குறித்த தகவலை தற்போது தெரிந்து கொள்வோம்.
பிரதமர் நரேந்திர மோடி
இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளார்.
இந்திய வரலாற்றில் நேருவிற்கு பின்பு இரண்டாவது முறையாக இந்த சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார். இவர் சம்பளமாக 1.66 லட்சம் பெறுகின்றாராம்.
மேலும் கூடுதல் சலுகையாக மத்திய அரசின் சிறப்புப் பாதுகாப்புக் குழு (SPG), இலவச வீடு ஆகியவற்றையும் பெறுகின்றார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி 272 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் கூட்டணி முறையில் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.
சம்பளம் எவ்வளவு?
இந்தியாவிலேயே உயர்ந்த பதவி என்றால் அது பிரதமர் பதவி தான். மேலும் இவரது செயல்பாடுகளும் மிகவும் முக்கியமானதாகும்.
பிரதமர் மோடிக்கு ஒவ்வொரு மாதமும் அடிப்படைச் சம்பளம் ரூ.50000, செலவுக் கொடுப்பனவு ரூ.3000, நாடாளுமன்றக் கொடுப்பனவு ரூ.45000, தினசரி கொடுப்பனவு ரூ.2000 ஆகியவை கிடைக்கின்றது.
இந்த முறை தேர்தலில் போட்டியிட்ட போது, மோடி தன்னிடம் ரூ. 3.02 கோடி சொத்து உள்ளதாக காண்பித்துள்ளார்.
பிரதமருடன் ஒப்பிடும்போது ஜனாதிபதியின் மாதம் சம்பளம் அதிகம் ஆகும். இந்திய குடியரசு தலைவர் மாதம் ரூ.5 லட்சமும், துணை குடியரசுத் தலைவர் மாதம் ரூ.4 லட்சம் ரூபாயும், ஒவ்வொரு எம்பிக்களும் ரூ. 1லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுகின்றனர்.
பிரதமர் மோடிக்கு வீடு, பாதுகாப்பை தவிர ஏர் இந்தியா ஒன் - பிரத்யேக விமானமும், Mercedez-Benz S650 புல்லட் புரூப் காரும் பயன்பாட்டில் உள்ளது.
ஒருவர் இந்திய நாட்டின் பிரதமாக இருந்து ஓய்வு பெற்றாலும் அவருக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இலவச தங்குமிடம், மின்சாரம், தண்ணீர் மற்றும் SPG பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |