கோவில் பிரசாத சுவையில் தித்திக்கும் சக்கரை பொங்கல் செய்வது எப்படி?
தைப்பொங்கல் திருநாள் என்றதுமே சட்டென நினைவுக்கு வருவது சக்கரை பொங்கல் தான்.
அனைவர் வீட்டிலும் பொங்கல் செய்தாலும் இந்த பொங்கலுக்கு சற்று வித்தியாசமாக கோவில் பிரசாதம் சுவையில் செய்வது எப்படி? என தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி- 1 கப்
வெல்லம்- கால் கிலோ
முந்திரி, உலர் திராட்சை- தேவையான அளவு
பசு நெய்- 10 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி- 1 டீஸ்பூன்
பச்சை கற்பூரம்- சிறிதளவு
செய்முறை
முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி வைக்கவும், தண்ணீர் கொதிநிலைக்கு வந்ததும் அரிசியை அலசிபோட்டு விட்டு வேக விடவும்.
அரிசி நன்றாக குழைந்து வெந்த பின்னர், தண்ணீரை மட்டும் வடித்துக் கொள்ளுங்கள்.
வெந்த அரிசியை மசித்துவிடவும், இதற்கிடையில் வெல்லத்தை பாகு காய்ச்சி சாதத்தில் ஊற்றவும்.
சாதமும், வெல்லமும் கலந்து வரும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும், மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி, உலர் திராட்சை வறுத்து பொங்கலில் சேர்க்கவும்.
அதன்பின் ஏலக்காய் பொடி, பச்சை கற்பூரத்தை சேர்த்தால் கோவில் பிரசாதம் சுவையில் சக்கரை பொங்கல் தயார்!!!