இந்தப் படத்தில் இருப்பது யார் தெரியுமா? எல்லோருக்கும் பிடித்த நடிகை தான்
ஹீரோயின் என்று சொன்னவுடன் ஸ்டைலிஷ்ஷான கூந்தல், எந்நேரமும் மேக்கப் கிட்டும் கையுமாக இருப்பவர்கள் மத்தியில், நீளமான கூந்தல், எதுவித மேக்கப்பும் இல்லாத இயற்கையான அழகை தன் வசம் வைத்திருப்பவர்தான் நடிகை சாய் பல்லவி.
மலர் டீச்சர் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் என்றால், அது சாய் பல்லவிதான். மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய, நிவின் பாலி கதாநாயகனாக நடித்த திரைப்படம்தான் பிரேமம். இந்தத் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
அந்தத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சாய்பல்லவி, தற்போது பல படங்களிலும் நடித்து முன்னணி கதாநாயகியாக மாறிவிட்டார்.
இவர் பெரும்பாலும் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இவரை இன்னும் ட்ரெண்டாக்கிய விடயம் என்னவென்றால், மாரி 2 திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த இவர், அந்தத் திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து ஆடிய ரவுடி பேபி பாடல் இணையத்தில் அதிக பார்வையாளர்களை பெற்ற பாடலாக சாதனை படைத்தது.
இந்நிலையில் தமிழில் பெரிதாக அவரால் ஜொலிக் கமுடியாததால் தெலுங்கில் நடிக்கத் தொடங்கினார்.
தெலுங்கில் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் டோலிவுட்டில் முன்னணி ஹீரோயினாகிவிட்டார்.
இவ்வாறு இருக்க அவ்வப்போது சினிமா பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகும். அந்த வகையில் தற்போது நடிகை சாய் பல்லவியின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதைப் பார்த்த சாய்பல்லவியின் ரசிகர்கள், சிறுவயதிலேயே இவ்வளவு க்யூட்டாக இருக்காங்களே என்று கமென்ட் செய்து வருகின்றனர்.