ஓ.ம் படத்தில் சாய் பல்லவிக்கு டூப்பா? ஸ்டண்ட் உதவியாளர் வெளியிட்ட உண்மை!
ஓ.ம்: Operation Mole திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவியின் அதிரடியான சண்டைக் காட்சிகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. இந்நிலையில், படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ஸ்டண்ட் உதவியாளர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளதைத் தொடர்ந்து, சாய் பல்லவி டூப் பயன்படுத்தினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான அமரன் திரைப்படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் சாய் பல்லவி. இதையடுத்து, மீண்டும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான ஓ.ம்: Operation Mole திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தனுஷ், மம்மூட்டி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அதிரடி காட்டியுள்ளார் சாய் பல்லவி. குறிப்பாக, அவரது சண்டைக் காட்சிகள் ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.
சாய் பல்லவிக்கு டூப் பயன்படுத்தப்பட்டதா?
இந்நிலையில், படத்தின் சண்டைக் காட்சிகளுக்கான ஒத்திகையில் பங்கேற்ற பெண் ஒருவர், படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த சில ரசிகர்கள், சாய் பல்லவி சண்டைக் காட்சிகளில் டூப் பயன்படுத்தியதாகக் கேள்வி எழுப்பினர்.

ஆனால், உண்மை அதுவல்ல. படத்தின் அனைத்து சண்டைக் காட்சிகளிலும் சாய் பல்லவியே நேரடியாக நடித்துள்ளார். அவருக்குப் பதிலாக அந்தப் பெண் டூப் போடவில்லை என்ற தகவலை சாய் பல்லவியின் ஸ்டண்ட் உதவியாளர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஸ்டண்ட் உதவியாளர் பகிர்ந்த தகவல்
இதுகுறித்து அந்தப் பெண் தனது பதிவில், சாய் பல்லவி சில மணி நேரப் பயிற்சிக்குப் பிறகே அனைத்து சண்டைக் காட்சிகளையும் மிகச் சிறப்பாகச் செய்து முடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இப்படத்தில் தான் ஸ்டண்ட் உதவியாளராகவும், சண்டைக் காட்சிகளை அமைப்பதற்கும் கேமரா ஒத்திகைகளுக்கும் உதவியதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவு மூலம் சாய் பல்லவியின் அர்ப்பணிப்பும், சண்டைக் காட்சிகளில் அவர் காட்டிய திறமையும் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் ரசிகர்கள் சாய் பல்லவியின் அர்ப்பணிப்பு குறித்து பாராட்டுக்களையும் குவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |