குப்புற படுக்கும் பெண்ணா நீங்க? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்
பெண்களின் உடல் அழகை பொருத்த வரையில் மார்பகங்களுக்கு முக்கிய பங்கு காணப்படுகின்றது. மார்பகங்களின் அளவு உடை அழகிலும் பாரிய தாக்கத்தை செலுத்துகின்றது.
மார்பகங்கள் தொய்ந்து காணப்பட்டால் எந்த உடை அணிந்தாலும் அது முழுமையடைவதில்லை, எனவே மார்பகங்களை தொய்வடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பெண்களின் மார்பகங்கள் கொழுப்பாலும் திசுக்களாலும் ஆனது. மார்பகங்கள் தொய்வடையாமல் இருப்பதற்கு தசைநார்கள் உதவுகின்றது.
இந்த தசைநார்களில் நெகிழ்வுத் தன்மை இல்லாமல் போகும் போதே மார்பகங்கள் தொய்வடைகின்றது. இதனை எவ்வாறு தடுக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மார்பகங்கள் தொய்வடைய காரணம்
மார்பகங்கள் தொய்வடைய முக்கிய காரணங்களுள் ஒன்று பொருத்தமற்ற உள்ளாடைகள் எனவே இதை தடுக்க சரியான உள்ளாடையை தெரிவு செய்வது அவசியம் இது மார்பகங்களுக்கு பக்க பலமாக இருந்து மார்பகங்கள் தொய்வடையாமல் இருக்க உதவுகின்றது.
மேலும் பெண்கள் உட்காரும் போது நிற்கும் போதும் உறங்கும் போதும் கூட சரியான மெய்நிலைகளை கடைப்பிடிப்பது அவசியம்.
பெண்கள் உறங்கும் போது குப்புற படுப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் மார்பகங்கள் விரைவில் தொய்வடைய இது முக்கிய காரணியாக இருக்கின்றது.
கொலாஜன் எனப்படுவது நமது சருமத்தில் காணப்படும் முக்கியமான புரதமாகும்.இது நமது சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை பராமரிக்க இன்றியமையாதது.
புகைப்பழக்கம் இருக்கும் பெண்களுக்கு நாளடைவில் கொலாஜன் உற்பத்தி குறைய ஆரம்பிக்கின்றது. அதனால் மார்பகம் மற்றும் முகத்தில் உள்ள தசைகளும் கூட தொய்வடைந்து வயதான தோற்றம் இலகுவில் வந்துவிடுகின்றது.
எடை குறைப்பு முயற்சிகளை பெண்கள் அதிகமாக பின்பற்றுவார்கள். ஆரோக்கியமான முறையில் எடை குறைப்பை மேற்கொள்ளாமல் உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது மார்பக திசுக்களில் உள்ள கொழுப்புச் சத்தும் குறைவடைகின்றது. இதனால் மார்பகங்கள் தொய்வடைகின்றது.
பாலூட்டும் காலங்களில் தாய்மார்கள் பெரும்பாலும் உள்ளாடை அணிவதை தவிர்த்து விடுகின்றனர், அது முற்றிலும் தவறான விடயம்.
இது மார்பகங்கள் தொய்வடைய முக்கிய காரணமான இருக்கின்றது. பாலூட்டும் காலங்களில் ஃபீடிங் பிராவை பயன்படுத்துவது சிறந்த தீர்வை கொடுக்கும், இதன் மூலம் மார்பகங்கள் தொய்வடைவதை தவிர்க்க முடியும்.
அதே மாதிரி பெண்கள் 30 வயதை எட்டும் போது மார்பகங்கள் தொய்வடைய ஆரம்பிக்கிறது. எனவே உடற்பயிற்சி முறையாக உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் மார்பழகை பாதுகாக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |