12 ஆண்டுகள் நின்றுகொண்டிந்த மனிதர் - இந்த தியாகம் எதற்காக?
கல்லூரியை விட்டு வெளியேறி 12 ஆண்டுகள் அசையாமல் நின்ற துறவியின் வியக்கத்தக்க கதை வைரலாகி வருகிறது.

12 ஆண்டுகள் நினறுகொண்டிருந்த மனிதர்
தனது பல்கலைக்கழகப் படிப்பின் போது ஆன்மீக விழிப்புணர்வு ஏற்பட்டதாகக் கூறும் ஓர் இந்தியர், கடும் துறவறத்தின் மூலம் இந்து தெய்வமான சிவனைக் காண முடியும் என்ற நம்பிக்கையில், சுமார் 12 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நின்று வருகிறார்.
தற்போது அவரது கால்கள் வீங்கி கருத்திருப்பதால், இணையவாசிகள் மத்தியில் சந்தேகமும் கவலையும் ஒருசேர எழுந்துள்ளது.
துரல் கிரி ஜி மகாராஜ் என்ற அந்த நபர், இளம் வயதிலேயே பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி, தன்னை சிவபெருமானுக்கு அர்ப்பணித்துக் கொண்டார் என்று செய்திகள் கூறுகின்றது.

உடல்ரீதியான கஷ்டங்களைத் தாங்கிக்கொள்வது ஆன்மீக ஞானோதயத்திற்கு வழிவகுக்கும் என்றும், அதன்மூலம் தெய்வீகத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அவர் நம்பி, அவர் ஒருபோதும் உட்காரவோ படுக்கவோ மாட்டேன் என சபதம் எடுத்துக்கொண்டு இதை செய்துள்ளாராம்.
ஓய்வெடுக்கும்போதோ அல்லது உறங்கும்போதோ , அவர் தன் உடலைத் தாங்கிக்கொண்டு கீழே விழாமல் இருப்பதற்காக, பெல்ட்கள் அல்லது கயிறுகள் போன்ற சாதனங்களைச் பயன்படுத்தி கொள்வாராம்.
இது, அவர் ஏறக்குறைய நின்ற நிலையிலேயே சிறிது நேரம் ஓய்வெடுக்க உதவுகிறது. இந்த காணொளி மக்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
هندي يُدعى "دولت جیری جی مهاراج" قرر ترك الدراسة الجامعية والتحول إلى التديّن ونذر نفسه لأمر واحد فقط وهو الوقوف إلى الأبد.
— إياد الحمود (@Eyaaaad) June 12, 2026
السبب؟
هذه العملية الدينية ستوصله في النهاية لرؤية الإله الهندوسي (ماهاديف) حسب اعتقاده.
بعض التقارير تقول بأنه منذ 12 عام وهو على هذا الوضع، لم يجلس أو… pic.twitter.com/MKEeRNrivK
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |