Dance Jodi Dance: அரங்கத்தில் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்த திருநங்கை! கண்கலங்கிய தருணம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் திருநங்கை சூரியா குட்டி முதல்வர் விஜய்க்கு அனைவர் முன்னிலையிலும் ஒரு கோரிக்கை விடுத்தார்.

டான்ஸ் ஜோடி டான்ஸ்
பிரபல தொலைக்காட்சிகளில் மக்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சிகள் பல நடைபெற்று வருகின்றது.
இதில் பாடும் திறமை உள்ளவர்களுக்கு சூப்பர் சரிகம போல, ஆடும் திறமை உள்ளவர்களுக்கு டான்ஸ் ஜோடி டான்ஸ் என ஒரு நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பபடுகிறது.
தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி ஆரம்பகட்டத்தில் போட்டியாளர்களை தெரிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் நடுவராக நடிகை சினேகா, சிம்ரன், பிரசாந்த் ஆகியோர் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் 'நீ வரும் போது நான் நனைவேனா' என்ற பாடலுக்கு ஒரு பெண் அழகாக நடனமாட நடுவர்கள் அந்த நடனத்தை ரசித்து 'உங்கள் ஆட்டத்தில் ஒரு அழகு இருக்கிறது.
மயக்கிட்டீங்க' என்று கூறினார்கள். இதன் பின்னர் அந்த பெண்ணிடம் உங்க பெயர் என்னவென்று கேட்க அவர் 'நான் ஒரு திருநங்கை கோவை சூர்யா குட்டி' என்று கூறினார்.
மேலும் 'விஜய் அண்ணா என்றால் ரொம்ப பிடிக்கும் ஆண்கள் பெண்களை மட்டுமே மதிக்கிறார்கள்.
இந்த இடத்தில் ஒன்று கூற விரும்புகிறனே் விஜய் அண்ணா எங்கள மாதிரி இருக்கும நிறைய பேருக்கு நீங்கள் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஹாஸ்டல் கட்டி கொடுக்க வேண்டும் இது என்றுடைய கோரிக்கை' என கூறினார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |