அஜித்தின் மனைவி பற்றி சுவாரசிய தகவலை கூறிய விஜய்யின் தந்தை!
பிரபல இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் அஜித்தின் மனைவியான ஷாலினி பற்றிய சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தன்னுடைய வாழ்க்கை அனுபவங்கள் குறித்து யூடியூப்பில் பகிர்ந்து கொண்டுள்ள போதே இதனை தெரிவித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக ஷாலினி
அதாவது, குழந்தை நட்சத்திரமாக ஷாலினி நடித்தது குறித்து பேசியுள்ளார்.
அதில், எஸ்ஏசி என்பதால் சட்டம் தொடர்பான படத்தை தான் எடுப்பார் என முத்திரை குத்திவிட்டார்கள்.
இதை உடைப்பதற்காக நிலவே மலரே படத்தை இயக்கினேன், உணர்வுகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஷாலினி நடித்தார்.
நவரச நாயகி
அப்போது அவருக்கு 5 வயது, இந்த படத்தில் தான் ரகுமானை அறிமுகப்படுத்தினேன்.
ஷாலினி குழந்தையாக இருந்தாலும் பிரமாதமாக நடிப்பார், கமெரா முன்பு வந்தவுடன் அழு என்றால் உடனே அழுது விடுவார், நவரசங்களையும் உடனுக்குடன் காட்டக்கூடியவர்.
அபார திறமையுடைய குழந்தை அவள் என புகழாரம் சூட்டியுள்ளார்.