சரிகமப-வில் மழலை குரலில் பாடிய போட்டியாளர்! அரங்கத்தில் கிடைத்த பெரும் பரிசு
சரிகமப வில் இன்றைய தினம் போட்டியாளர் முருகன் பாடலை மழலை குரலில் பாடியதற்கு அரங்கத்திலேயே கிடைத்தது பரிசு. இதை இந்த பதிவில் மூலம் பார்க்கலாம்.
சரிகமப
தற்போது சரிகமபவில் லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 4 நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் 26 போட்டியாளர்கள் பங்குபற்றி இருந்த நிலையில் இதில் நான்கு போட்டியாளர்கள் கடந்த வாரம் போட்டியை விட்டு வெளியேறிச்சென்றனர்.
இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் சிறப்பான திறமையை காட்டி வருகின்றனர். சிறிய வயதாக இருந்தாலும் அவர்களின் பாடும் திறமையோ மிகையாக உள்ளது. இந்த பக்தி பாடல் சுற்றில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பக்தி பாடல்களை பாடி அசத்தி வருகின்றனர்.
இன்று நடந்து முடிந்த எபிசோட்டில் போட்டியாளர் புவனேஷ் 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' என்ற பாடலை தன் மழலை குரலில் பாடியது அனைவரையும் ஈர்த்தது. இந்த பாடலை பாடி முடித்ததும் போட்டியாளர் கோல்டன் பெர்போமன்ஸ் பெற்றார்.
இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராமக பங்கேற்றி இருந்த சிவச்சித்தம்ரம் ஐயா மேடைக்கு பணிவுடன் அழைக்கப்பட்டார். இவரின் குடும்பம் பரம்பரை பரம்பரையாக முருகனின் பாடல் பாடுபவர்கள்.
எனவே போட்டியாளர் புவனேஷ் சிறப்பான முருகனின் பாடல் பாடியதால் சிவச்சித்தம்ரம் ஐயாவின் ஆசிர்வாதம் பெற்றுக்கொடுக்கப்பட்டது. இது விலைமதிப்பில்லாத ஒரு பரிசாகும். இதனை தொடர்ந்து நாளைய எபிசோட்டில் யார் சிறப்பாக பாடுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |