பாடகி ஜானகியின் மகன் திடீர் உயிரிழப்பு... சோகத்தில் திரையுலகினர்
பாடகி ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா உடல்நல குறைவினால் இன்று உயிரிழந்துள்ள நிலையில், திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடகி ஜானகி
பின்னணி பாடகி ஜானகி தனது குரலால் ஒட்டுமொத்த மக்களையும் கட்டிப்போட்டவர் ஆவார். இவருக்கு ஒரே ஒரு மகன் முரளி கிருஷ்ணா ஆவார். இவருக்கு வயது 65 ஆகியுள்ள நிலையில், அம்மா ஜானகியுடன் வசித்து வந்துள்ளார்.
திரைத்துறையில் ஆர்வம் கொண்ட முரளி கிருஷ்ணா சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகின்றார். பரதநாட்டிய கலைஞர் உமாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை சில ஆண்டுகளில் விவாகரத்தில் முடிந்த நிலையில், தாய் ஜானகியுடன் இருந்து அவரை கவனித்து வந்துள்ளார்.
சமீப காலமாக பாடல்கள் எதுவும் பாடாமல் இருந்துள்ள ஜானகி, தனது மகன் அரவணைப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகன் முரளி கிருஷ்ணா இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
மகனின் இறப்பினால் துயரத்தில் இருக்கும் ஜானகிக்கு திரைத்துறையினர் பலரும் தங்களது ஆறுதலைக் கூறி வருகின்றனர்.