உக்ரைன் ரஷ்யா போர் முடிவுக்கு வரப்போகிறதா? ரஷ்ய அதிபர் அளித்த விளக்கம்
உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது அதிபர் புதின் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யாவின் போரால் உலக நாடுகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
ஆனால், அதையெல்லாம் ரஷ்யா கண்டுக்கொள்ளவே இல்லை. தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளிடையேயும் பதற்றம் நீடித்த படியே உள்ளது.
ஒரு பக்கம் போர் மறு பக்கம் பேச்சுவார்த்தை என சென்றுகொண்டிருக்கும் நேரத்தில், சமீபத்தில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் துருக்கியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இதனிடையில், தற்போது பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
அதில் பேசிய அவர், “உக்ரைன் உடனான பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதில் சில நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா சார்பில் பங்கேற்றுள்ள பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பின்னர் விரிவாகப் பேசுகிறேன். ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவை பலவீனப்படுத்தாது.
அது வலுவானதாகவே மாறும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்” என புதின் கூறியுள்ளார். அதனால் விரையில் போர் முடிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.