ரஷியாவுடன் பண பரிவர்த்தனையை நிறுத்த திட்டமா? அதிரடியில் இறங்கிய ஐரோப்பிய யூனியன்
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் போரை நிறுத்த கோரி பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு நாட்டின் எல்லையை தாண்டி நடைபெறும் பண பரிவர்த்தனை பெல்ஜீயத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரஷியாவின் தாக்குதலால் பணபரிவர்த்தனையை நிறுத்த ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த தடை விதிக்கப்படும் பட்சத்தில் ரஷியா வெளிநாடுகள், பெரு நிறுவனங்களிடையே பண பரிவர்த்தனையில் ஈடுபடுவது நிறுத்தப்படும்.
இது ரஷியாவின் பொருளாதாரத்திற்கு பேரடியாக விழும். உலக அளவில் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் 11 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கிகள், நிதி நிறுவனங்கள் இந்த அமைப்பை பயன்படுத்தி பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருகின்றன.
ஷிப்ட் அமைப்பில் இருந்து ரஷியா நீக்கப்படும் பட்சத்தில் அந்நாடு மிகப்பெரிய பொருளாதார பேரழிவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.