92 வயதில் 5ஆவது திருமணத்திற்கு தயாரான ரூபர்ட் மர்டாக்: தனது "கடைசி" உறவை அறிமுகப்படுத்திருக்கிறார்!
92 வயதைத் தாண்டிய ரூபர்ட் மர்டாக் என்ற உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய ஊடக நிறுவன தொழிலதிபர் தனது ஐந்தாவது மனைவி ஆன் லெஸ்லியை திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார்.
5ஆவது திருமணத்திற்கு தயார்
அவுஸ்திரேலிய தொழிலதிபரான ரூபர்ட் முர்டோக் தனது 92ஆவது வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாக கூறி தனது காதலியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
இவரின் காதலி ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்தவரான 66 வயதான ஆன் லெஸ்லி ஆவார். முர்டோக்கிற்கு முதல் மூன்று திருமணங்களின் மூலம் ஆறு குழந்தைகள் உள்ள நிலையில், இவரின் நான்காவது மனைவி கடந்த வருடம் தான் இவரை விட்டு பிரிந்துள்ளார்.
வருகின்ற கோடையில் இவர்களுக்கு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில், தனது வருங்கால மனைவிக்காக அஸ்ஷர் - கட் வைர மோதிரத்தை முர்டோக் வாங்கியுள்ளார்.
திருமணம் நடக்க இருக்கும் நிலையில், “நாங்கள் இருவரும் எங்கள் வாழ்வின் இரண்டாம் பாதியை ஒன்றாகக் கழிக்க எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்”என முர்டோக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, "காதலிக்க பயந்தேன்" என்று கூறிய மர்டாக், இதுவே தனது "கடைசி" உறவு என்றும் உறுதியாகச் சொல்லி இருக்கிறார்.
மர்டாக்கிற்கு முதல் மூன்று திருமணங்களில் ஆறு குழந்தைகள் பிறந்தனர். ப்ருடென்ஸ் மேக்லியோட், அவரது முதல் மனைவி பாட்ரிசியா புக்கருக்குப் பிறந்தவர்.
எலிசபெத்தும் மகன்கள் லாச்லன் மற்றும் ஜேம்ஸ் ஆகிய இருவரும் இரண்டாவது மனைவி அன்னா மானுக்குப் பிறந்தவர்கள். மூன்றாவது மனைவியான வெண்டி டெங்குக்கு கிரேஸ் மற்றும் சோலி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.
மர்டோக்கின் நான்காவது மனைவி முன்னாள் மாடல் அழகி ஜெர்ரி ஹால். கடந்த ஆண்டுதான் மர்டாக் இவரிடமிருந்து பிரிந்து விட்டார் எனவும் தெரிவித்திருந்தார்.