பாசக்கார நாய்க்குட்டியின் சுட்டித்தனம்! தலைத்தெறிக்க ஓடிய தம்பதி! என்ன நடந்தது தெரியுமா?
உரிமையாளர்கள் நாய்க்குட்டிக்கு வைத்த அன்பு சோதனையில் கடுப்பான நாய்க்குட்டி தன்னைத் தானே சுற்றிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தாங்கள் செல்லமாக வளர்க்கும் நாய்க்குட்டியை சாலைக்கு அழைத்து வரும் தம்பதி, யாரை அதிகம் விரும்புகிறது என்பதை பரிசோதிக்க முயற்சிக்கின்றனர்.
சாலையின் நடுவே இருவரும் நின்றுகொள்ளும்போது, அவர்களுக்கு இடையில் நாய்க்குட்டியும் நின்று கொள்கிறது.
Lmaooooooo dogs are the best ?? pic.twitter.com/0IQxggy4Fk
— Queen ? (@jadastackhouse) May 23, 2021
அப்போது, ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் தம்பதியினர், திடீரென எதிரெதிர் திசையில் வேகமாக ஓடிவிடுகின்றனர். இருவருமே பாசத்துக்குரியவர்கள் என்பதால் யார் சென்ற திசையில் ஓடுவது என்பதை புரியாமல் நாய்க்குட்டியானது சாலையின் நடுவே நின்று, அவர்கள் ஓடிய திசையை பார்க்கிறது.
அதன்பிறகு அந்த நாய்க்குட்டி செய்த சுட்டித்தனம் தான், வீடியோவை டிரெண்டாக்கியுள்ளது.