முகத்தின் அழகை அதிகரிக்க வேண்டுமா? வெறும் தக்காளி மட்டும் போதும்
தக்காளி ஐஸ் கியூப் முகத்திற்கு என்னென்ன நன்மையினை அளிக்கின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் பலரும் தங்களது முக அழகை பராமரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
இளம் வயதிலேயே முகத்தில் கரும்புள்ளி, பருக்கள், இறந்த செல்களால் வயதான தோற்றம் இவற்றினை சந்திக்க நேரிடுகின்றது.
இதற்கான தீர்வினை தக்காளி ஐஸ் கியூப் கொண்டு எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தக்காளி ஐஸ் கியூப்
தினமும் முகத்திற்கு தக்காளி ஐஸ் கியூப் தடவினால், இதிலுள்ள வைட்டமின் சி பல நன்மைகளை அளிக்கின்றது.
தக்காளியின் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் இவை முகத்தில் ஏற்படும் சிவப்பை குறைக்க பெரிதும் உதவுகின்றது.
தினமும் முகத்திற்கு தக்காளி ஐஸ் கியூப் தடவி வந்தால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி விடுகின்றது.
தக்காளி சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பது மட்டுமில்லாமல் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்ற உதவுகின்றது.
தக்காளியில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் அவை முகத்தில் உள்ள பருக்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க உதவுகின்றது.
தக்காளியில் இருக்கும் ப்ளீச்சிங் பண்புகள் முகத்தில் ஏற்படும் பழுப்பு நிற மாற்றத்தை குறைப்பதுடன், முகத்தை சுத்தமாகவும் வைக்க உதவுகின்றது.
தக்காளியை நன்கு அரைத்து அதன் சாற்றை ப்ரீசரில் ஐஸ் ட்ரேயில் ஊற்றி வைக்க வேண்டும். பின்பு ஐஸ் கட்டியாக மாறிய பின்பு இதனை வைத்து முகத்திற்கு மசாஜ் செய்யலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |