மாடர்ன் உடையில் கருப்பு வைரமாக ஜொலிக்கும் கண்ணம்மா: காந்த பார்வையால் கிரங்கும் ரசிகர்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகி கண்ணம்மா தனது மாடர்ன் புகைப்படத்தினை தற்போது வெளியிட்டுள்ளார்.
பிரபல ரிவியில் புதிய திருப்பங்களுடன் தற்போது பாரதி கண்ணம்மா நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் ரசிகர்களும் பல எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.
சமீபத்தில் பாரதிக்கும், கண்ணம்மாவிற்கு இடையே மனதிற்குள் சற்று காதல் வைரஸ் ஒடிக்கொண்டிருந்தது.
இந்நிலையில் பாரதி தனது மகளை வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்ல முடிவு எடுத்துள்ள நிலையில், அதனை கண்ணம்மா தடுப்பதற்கு முயற்சித்து வருகின்றார்.
மேலும் சீரியலின் வில்லியும் ஒருபுறம் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு டுவிஸ்ட் வைத்து வரும் நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.
கருப்பாக இருந்து ரசிகர்களைக் கவர்ந்து வரும் ரோஷினி ஹரிபிரியன் தற்போது புதிய போட்டோவை வெளியிட்டுள்ளார்.
இதில் கருப்பு நிற மாடர்ன் உடையினை அணிந்து அவரது காந்த கண்களால் பார்க்கும் புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் அவரது கண்களையும், அழகையும் புகழ்ந்து வருகின்றனர்.