ரோஜா சீரியல் நாயகனுக்கு பிறந்த வாரிசு - முதல் முறை வெளியான புகைப்படம்...என்ன குழந்தை தெரியுமா?
ரோஜா சீரியல் நாயகன் சிபு சூரியன் முதன் முறையாக தன் மகனின் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
ரோஜா சீரியல் தற்போது சின்னத்திரையில் டாப் சீரியலில் ஒன்றாக இருந்து வருகிறது. வாரம்தோறும் டிஆர்பியில் முதலிடம் அல்லது இரண்டாவது இடத்தில் இது நீடித்து வருகிறது.
ரோஜாவில் அர்ஜுன் என்கிற ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிபு சூரியன். அவர் கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு இங்கு எக்கச்சக்க ரசிகர்கள் கிடைத்து இருக்கிறார்கள்.

மகனின் புகைப்படத்தினை முதல் முறை வெளியிட்ட சிபு
இந்நிலையில் அண்மையில் சிபுவிற்கு ஆண் குழந்தை பிறந்து இருந்தது.
இதுவரை தன் மகனின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த சிபு முதன் முறையாக தன் மகன் குறித்து பதிவிட்டு இருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.