ரோஜா மகனுக்கு 20 வயதா? திருவிழா போல நடந்த பிறந்தநாள் விழா! காணொளி வைரல்
ரோஜா மகனின் 20 வயது பிறந்தநாள் கொண்டாட்டம் திருவிழா போல கொண்டாடப்பட்டது. இதற்கு ரோஜா மிகவும் எமோஷனலான பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

நடிகை ரோஜா
90களின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரோஜா, ஆர்.கே. செல்வமணி இயக்கிய செம்பருத்தி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ,இன்னும் பல வெற்றிப்டங்களில் நடித்தார்.
பின்னர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரோஜாவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், அவரது மகன் தனது 20வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடியுள்ளார்.
அந்தப் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கெனிஷ்
வீட்டில் பிறந்தநாள் விழா களைகட்டியது. கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடப்பட்ட அந்த விழாவில் ரோஜாவின் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டார்கள்.
ரோஜா தன் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "என் அன்பு மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

நீ அழகான மனிதராக வளர்ந்திருப்பதை பார்ப்பதே எனது வாழ்க்கையின் பெரிய மகிழ்ச்சி. நல்ல உடல்நலம், மகிழ்ச்சி, வெற்றி, வாய்ப்புகள் அனைத்தையும் கடவுள் உனக்கு வழங்க வேண்டும்.
எப்போதும் பணிவுடனும், அன்பாகவும் இரு. உனது கனவுகளை தன்னம்பிக்கையுடன் துரத்து. அவை நிச்சயம் நனவாகும். உனக்கு எவ்வளவு வயதானாலும் நீ எப்போதுமே எனக்கு குழந்தைதான்" என குறிப்பிட்டிருக்கிறார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |