வெளிநாட்டில் படிக்கும் ரோஜா மகளின் லட்சியம் இது தான்! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
மகளின் சினிமா என்ட்ரி குறித்து ஆர் கே செல்வமணி விளக்கம் கொடுத்திருக்கின்றார்.
விக்ரமின் மகன், துருவ் விக்ரம் நேரடியாக தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
அந்த படத்தின் கதாநாயகியாக ரோஜாவின் மகள் அன்சுமாலிகா கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் பரவி வந்தது.

வதந்திக்கு முற்று வைத்த ஆர் கே செல்வமணி
இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள செல்வமணி ‘அவளுக்கு சிறுவயதில் இருந்தே சயின்டிஸ்ட் ஆக வேண்டும் என்பதுதான் விருப்பம்.
மகன் மற்றும் மகள் மீது எங்கள் விருப்பத்தை திணிக்கும் பெற்றோர்களாக நானும் ரோஜாவும் இருந்தது கிடையாது.
12ஆம் வகுப்பு முடித்துவிட்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வேண்டும் என்பதை நிறைவேற்றி வைத்தோம்.
தற்போது பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க அமெரிக்கா சென்றிருக்கிறார்.
இன்னும் நான்கு வருடங்கள் அங்கு தான் இருப்பாள். அதனால் அவர் சினிமாவில் நடிக்கப் போகிறார் என்பதெல்லாம் முற்றிலும் வதந்தி தான்.
ஒருவேளை நான்கு வருடங்கள் கழித்து அவள் சினிமாவில் நடித்த ஓகேவா என்றால், நானும் எனது மனைவியும் சினிமாவில் இருந்தவர்கள், ஒருவேளை அவள் நடிக்க விருப்பப்பட்டால் நாங்கள் நடிக்க அனுமதிப்போம்.
ஆனால், இப்போதைக்கு அவளுக்கு நடிப்பதில் விருப்பமில்லை சயின்டிஸ்ட் ஆக வேண்டும் என்பது மட்டுமே அவளது கனவு’ என்று கூறியுள்ளார்.