சிஎஸ்கே வீரர் என்பதால் புறக்கணிக்கிறாரா ரோகித் சர்மா? கொந்தளிக்கும் ரசிகர்கள்
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்கான டி20யில், இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில், இந்த போட்டியில், தொடக்க வீரராக அணியில் இடம்பெற்றுள்ள ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அவருக்கு பதிலாக இடதுகை ஆட்டக்காரரான இஷான் கிஷனுக்கே மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
ஐபிஎல்லில் 15 கோடிக்கு மும்பை அணிக்கும் ஏலம் போன அவரை ரோகித் சர்மா அடிக்கடி ஓப்பனிங் பேட்டிங்கில் சோதிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

ஒரு வேளை ஐபிஎல்லில் சென்னை அணி வீரர் என்பதால் ரோகித் சர்மா, ருதுராஜை மறுக்கிறாரா? எனவும் கடுமையாக விமர்சனங்கள் எழுகிறது.
தனக்கு கிடைத்த இந்த இரண்டு வாய்ப்புகளே இஷான் கிஷன் தவறவிட்டார். இதனால் அவருக்கு ஏன் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், கடைசி டி20 போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கூறிவருகின்றனர்.