தரை துடைப்பது முதல் பாத்திரம் கழுவுவது வரை – அசத்தும் புதிய தலைமுறை ரோபோக்கள்!
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த ‘டாவ் ரோபோடிக்ஸ்’ நிறுவனம், வீட்டு வேலைகளைச் செய்யக்கூடிய அதிநவீன ரோபோக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுமார் 4.4 அடி உயரமும் 35 கிலோ எடையும் கொண்ட இந்த ரோபோக்கள், படிக்கட்டுகள், கார்பெட்கள் மற்றும் பல்வேறு தரைகளில் எளிதாகச் சென்று வேலை செய்யும் திறன் கொண்டவை.

ஸ்ப்ரே பாட்டில்கள், வேக்கம் கிளீனர்கள் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி தரையைச் சுத்தம் செய்தல், பாத்திரங்களைக் கழுவுதல், கழிப்பறையைச் சுத்தம் செய்தல், படுக்கையைச் சரிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு வீட்டு வேலைகளையும் அவை மேற்கொள்கின்றன.
இந்த ரோபோக்களின் துப்புரவுப் பணித் திறன் குறித்து பயனாளர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மனிதர்களின் நுணுக்கமான துப்புரவுப் பணிகளுக்கு இவை இன்னும் முழுமையான மாற்றாக முடியாது எனத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதேவேளை, பெரிய வணிக நிறுவனங்களில் இத்தகைய ரோபோக்கள் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
A San Francisco-based robotics company is betting humanoid robots can succeed where automation has previously struggled: navigating the cluttered, unpredictable environment of people's homes to provide a cleaning service https://t.co/Qq5IHGmstQ
— Reuters (@Reuters) September 29, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |