கியூஆர் கோடு அட்டையுடன் யாசகம் கேட்கும் ரோபோ... வைரலாகும் காட்சி
சீனாவில் ரோபோ ஒன்று தெருவில் மண்டியிட்டு யாசகம் கேட்ட காட்சி வைரலாகி வருகின்றது.
யாசகம் கேட்கும் ரோபோ
சீனா ஹாங்சோ நகரை தலைமையிடமாக கொண்ட யூனிட்ரீ ரோபோடிக்ஸ் என்ற நிறுவனம், மனித வடிவிலான ரோபோக்களை உற்பத்தி செய்து வருகின்றது.
ஒரு ரோபோவின் ஆரம்ப விலை 16 லட்சம் என்று கூறப்படும் நிலையில், இதனை தான் பெரும்பாலான வீடுகளில் பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர்.

அதுமட்டுமின்றி தீயணைப்பு உள்ளிட்ட பேரிடர் மீட்பு பணிகளிலும் இந்த ரோபோக்கள் பயன்படுத்தபட்டு வருகின்றது.
இந்நிலையில் குறித்த ரோபோவை மக்களிடம் பிரபலப்படுத்த நினைத்த குறித்த நிறுவனம், நூதன முறையில் விளம்பரம் செய்துள்ளது.
அதாவது சீனாவில் செங்டூவின் பிரதான சாலையில், ரோபோ ஒன்று கியூஆர் கோடு அட்டையுடன் யாசகம் கேட்டு வருகின்றது.
மண்டியிட்டு அமர்ந்து, கைகளைக் கூப்பி யாசகம் கோருகின்றது. மின்சார கட்டணத்தினை செலுத்துவதற்கு பணம் இல்லை எனவே யாசகம் அளித்து உதவுங்கள் என ரோபோ உருக்கமாக கூறுகின்றது.
யாசம் கேட்டும் ரோபோவின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |