30 நாள் கழிச்சு வந்துரு.. ரோபோ சங்கர் மனைவி பகிர்ந்த Video- கண்கலங்க வைத்த தருணம்
“30 நாட்கள் கழிச்சு படப்பிடிப்பில் இருந்து வந்துரு.. ” என வீடியோ கோல் பேசிய காணொளியுடன் ரோபோ சங்கர் மனைவி பகிர்ந்து பதிவு இணையவாசிகளை உருக வைத்துள்ளது.
ரோபோ சங்கர்
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது வந்து கலக்கி வெள்ளித்திரையில் தற்போது கொடிக்கட்டி பறக்கும் நகைச்சுவை நடிகர் தான் ரோபோ சங்கர்.
இவர் தமிழ் சினிமாவிலுள்ள அத்தனை முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார்.
நகைச்சுவை நடிகராக கலக்கி வரும் நேரத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு நடிப்பிற்கு சற்று இடைவெளி விட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்தன் காரணமாக, சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு அங்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்த காரணத்தினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரின் திடீர் மறைவு குடும்பத்தினரையும், திரையுலகினரையும், அவரின் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீக்கிரமா வந்துருங்க..
இந்த நிலையில், ரோபோ சங்கர் இறப்பு பற்றிய செய்திகள் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா ரோபோ சங்கர் வீடியோ கோல் பேசிய காணொளியொன்றை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “ 30நாளுக்கு பிறகு உன்னுடன் ஒரு காணொளி உரையாடல் & குரல் கேட்கிறேன் சங்கராம்மா. சீக்கிரமா ஷூட்டிங் முடிச்சிட்டு வந்திடும்மா மொசக்குட்டி நட்சத்திரனும் நாங்களும் காத்திருக்கோம்மா...” என தன்னுடைய உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |