கொரோனா காலத்திலிருந்து தான் இப்படி ஆகிருச்சு! கண்ணீருடன் ரோபோ சங்கரின் மனைவி
நடிகர் ரோபோ சங்கரின் மனைவியின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் தான் ரோபோ சங்கர்.
இவர் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவரின் நடிப்பிற்கும் பேச்சு திறமைக்கும் தமிழகத்தில் பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நடிகை ரோபோ சங்கர் அவர்கள் சமிபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் அனைத்திலும் உடல் மெலிந்த நிலையில் தான் காணப்படுகிறார்.
புகைப்படத்துடன் வேதனை பகிர்ந்த பிரபலம்
இதனை தொடர்ந்து ரோபோ சங்கரின் மனைவி இன்ஸ்கிராமில் இறந்து போன அவரின் அம்மாவின் புகைப்படத்தை பகிர்ந்து உருக்கம் தெரிவித்துள்ளார்.
அதில்,“ கொரோனா காலத்தில் எல்லோரும் வீட்டில் இருக்கையில் நீங்க மட்டும் எங்க போனீங்க அம்மா. ” என மிகவும் வறுத்தமாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவு ரோபோ சங்கரின் மனைவியின் மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளது.
இதற்கு ரசிகர்களும் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார்கள்.