பேரனுடன் கொஞ்சி விளையாடும் ரோபோ சங்கர்- ஒற்றை படத்துக்கு குவியும் Likes
பேரனுடன் கொஞ்சி விளையாடும் ரோபோ சங்கரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகர் ரோபோ சங்கர்
தமிழ் சினிமாவில் பரிச்சயமானவர் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ரோபோ சங்கர்.
இவர் சினிமாவிற்குள் வந்து குறுகிய காலம் என்றாலும், இவரை தெரியாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது.
ரோபோ சங்கர் ஆரம்ப காலங்களில் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்.
இதனை தொடர்ந்து தனுஸ், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
அந்த சமயத்தில் திடீரென மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு பார்ப்பதற்கு பரிதாபமான நிலையில் இருந்தார். அப்போதும் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.
பேரனை கொஞ்சி விளையாடும் படங்கள்
இந்த நிலையில், தற்போது நோயிலிருந்து மீண்டெழுந்த ரோபோ சங்கர் வெள்ளத்திரை படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
அத்துடன், சமூக வலைத்தளங்களில் குடும்பமாக ஆக்டிவாக இருக்கும் ரோபோ சங்கர் தன்னுடைய பேரனை கொஞ்சும் புகைப்படங்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள் இருவருக்கும் லைக்குக்களை குவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |