எலும்பும் தோலுமாக மாறிய ரோபோ சங்கர்! அரங்கத்தையே கண்கலங்க வைத்த நிகழ்வு
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4ல் கலந்து கொண்ட ரோபோ சங்கர் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்துள்ளார்.
ரோபோ சங்கர்
கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தனது கொமடியில் மக்கள் மனதில் குடிகொண்ட ரோபோ சங்கர் மிமிக்ரி கலைஞராகவும் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் இவரை வெற்றி பெற வைத்தது இவரது பாடி லாக்குவேஜ் தான். ஆம் தனது கம்பீரமான உடம்பினால், ஆக்ஷனாலும் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள் வரை கவர்ந்திருந்தார்.
இந்நிலையில் இவரது புகைப்படம் சமீபத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ரோபோ சங்கரின் கம்பீரம் என்றால் அவரது உடல் எடை தான். தற்போது உடல் எடை குறைந்து எலும்பும் தோலுமாக மாறியுள்ளார்.
உடல் இழப்பிற்கு உண்மை காரணம்
ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை பாதித்து இருந்ததாகவும், அது அவருக்கு ஆறு மாதங்களாக தெரியாமல் இருந்திருக்கிறது என்றும் பிறகு வெளிநாட்டிற்கு சூட்டிங் சென்றிருந்த இடத்தில் ரோபோ சங்கருக்கு தீவிரமான வயிற்றுப்போக்கு காரணமாக உடல் நல பிரச்சனை ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மேலும் இதனால் அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதே இவ்வளவு தீவிர பிரச்சினைக்கு காரணம் என்று கூறப்படுகின்றது. ரோபோ சங்கர் அதிகமான அசைவ உணவுகளையும், மது அருந்தும் பழக்கம் கொண்டுள்ளதும் இதற்கு காரணம்.
ரீ எண்ட்ரி கொடுத்த ரோபோ சங்கர்
இந்நிலையில் சினிமாவில் மீண்டும் எண்ட்ரி கொடுத்த ரோபோ சங்கர் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார் மியூசிக் சீசன் 4ல் கலந்து கொண்டுள்ளார்.
இதில் பிரியங்காவுடன் இணைந்து ரஜினியின் தளபதி படத்தின் பாடலான காட்டுக்குள்ள மனசுக்குள்ள பாடலை பாடி அசத்தியுள்ளார்.
என்னதான் இவர் மகிழ்ச்சியாக இருப்பது போன்று மக்களிடம் காட்டிக் கொண்டாலும் இவரது முகம் சோகமாகவே இருந்து வருகின்றது. இவரது உடல் தோற்றத்தினை பார்த்து வரும் ரசிகர்கள் பெரும் வேதனை அடைந்து வருகின்றனர்.
கலக்குறீங்க ரோபோ அண்ணே 😁#StartMusicSeason4 - ஞாயிறுகளில் இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #StartMusic #StartMusic4 #VijayTelevision #VijayTV pic.twitter.com/0UtHXuBBhE
— Vijay Television (@vijaytelevision) April 30, 2023