குடும்பமாக ஜிம்மில் குடியேறிய ரோபோ சங்கர்: எடையைக் குறைக்க போராடும் குடும்பத்தினர்!
ரோபோ சங்கரின் குடும்பமே தற்போது பழைய நிலைமைக்கும் வர ஜிம்மில் வேர்க்அவுட் செய்து வரும் வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகின்றது.
ரோபோ சங்கர்
நகைச்சுவை நடிகராக பிரபலமான ரோபோ சங்கர் முதலில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.
அதன் பின் கலக்கபோவது யாரு, அசத்தப் போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பல குரலில் பேசி அசத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதற்குப் பின்னர் தான் சினிமாவிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்து வாய்ப்புகள் வர பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார்.
தொடர்ந்தும், மாரி, விஸ்வாசம், வேலைக்காரன், பிகில் போன்ற படங்கள் இவரை இன்னும் பிரபலமாக்கியது. ரோபோ சங்கர் எப்போதும் கொளு கொளுவென கொஞ்சம் அதிக எடையுடன் தான் இருப்பார். ஆனால் தற்போது பார்க்கவே பரிதாபமாக மாறி தற்போது தேறி வருகிறார்.
வைரல் வீடியோ
ரோபோ சங்கரின் குடும்பமே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார்கள். இவர்கள் அவ்வப்போது ரீல்ஸ் செய்து வெளியிடுவது வழக்கம்.
அந்தவகையில் அந்த வீடியோவில் குடும்பமே ஜிம்மில் வேர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |