திருமண சடங்கில் இந்திரஜா செய்த காரியம்... மணப்பெண்ணே நீதான் என்ற பிரபல நடிகர்
பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கரின் திருமண கொண்டாட்டம் ஆரம்பித்த நிலையில், திருமண சடங்குகள் கோலாகலமாக நடந்து வருகின்றது.
ரோபோ சங்கர்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம்வரும் ரோபோ சங்கர், பிரபல ரிவியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பிரபல ரிவி நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு என்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் தனி இடத்தினை பிடித்த இவர், தற்போது வெள்ளித்திரையிலும் கலக்கி வருகின்றார்.
ரோபோ சங்கர் கடந்த ஆண்டு மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டு உடல் எடை மெலிந்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
அதிலிருந்து மீண்டு தற்போது தனது வேலையை பார்த்து வரும் ரோபோ சங்கர், தனது மகளின் திருமண கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியாக காணப்படுகின்றார்.
ஆம் தனது மகள் இந்திரஜாவிற்கு தனது மனைவியின் தம்பி கார்த்தி என்பவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தற்போது திருமண கொண்டாட்டம் ஆரம்பித்துள்ளது.
களைகட்டும் திருமண சடங்குகள்
இதனையடுத்து தற்பொழுது திருமண நிகழ்வுக்கான சடங்குகள் துவங்கியுள்ளது. சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டதுடன், கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகளையும் நடத்தி அசத்தியுள்ளனர்.
தற்பொழுது அந்த செலிப்ரேஷன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிரபல நடிகர் ராஜ்கமல்.
மேலும் தனது தங்கை இந்திரஜாவிற்கு அனைவரும் திருமண வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.