யானை வாங்கி கொடுத்த நடிகை பிரியாமணி... என்ன காரணம் தெரியுமா?
நடிகை பிரியாமணி கேரளாவின் கொச்சியில் இருக்கும் ஒரு கோவிலுக்கு யானை வாங்கி கொடுத்துள்ள விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை பிரியாமணி
கண்களால் கைது செய் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா மணி. 2006 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரனில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 'சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பொற்றார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என நிறைய படங்களில் நடித்த பிரியாமணி ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விட்டார்.
கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியாகி ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்து ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து பிரியாமணிக்கு நிறைய பாலிவுட் வாய்ப்புகள் வருவதாகவும் அதனை அவர் புறக்கணித்து வருவதாகவும் தவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இதுவரை எந்த நாயகியும் செய்யாத ஒரு விஷயமாக நடிகை பிரியாமணி செய்துள்ளார்.
கோவில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் விதமாக இயந்திர யானைகளை இடம்பெறச் செய்யும் புதிய திட்டத்தை பீட்டா அமைப்பு தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது.
அதனை ஆதரிக்கும் விதமாக நடிகை பிரியாமணியும் பீட்டா அமைப்பில் இணைந்து ஒரு இயந்திர யானையை கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள திருக்கயில் மகாதேவா கோவிலுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.
இந்த எந்திர யானை உயிருள்ள யானையைப் போன்றே காது, தும்பிக்கைகளை நின்ற இடத்திலிருந்தே அசைக்கின்றது இது பார்ப்பவர்களக்கு உண்மையான யானை போன்று தோற்றமளிக்கின்றது.
குறித்த யானைக்கு மகாதேவன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி, யானைகளை துன்புறுத்தாமலே நமது கலாச்சாரத்தை பாதுகாக்க முடியும் என பிரியாமணி குறிப்பிட்டுள்ளார்.