நட்ஸ் வகைகளை வறுத்து சாப்பிடுவது புற்றுநோயை உண்டாக்குமா? மருத்துவ விளக்கம்
நட்ஸ் மற்றும் அதன் விதைகளை வறுக்கும் பொழுது அதன் சத்துக்கள் மாற்றமடைந்து புற்றுநோய் வருமென்பதை மருத்துவர் பரிந்துரைக்கின்றார்.
நட்ஸ்
நட்ஸ் மற்றும் விதைகளை வறுக்காமல் பச்சையாக சாப்பிடுவது அதிக ஆரோக்கியமானது. நட்ஸ் மற்றும் விதைகளை வறுப்பதால் ஏற்படக்கூடிய ஊட்டச்சத்து மாற்றம் என்பது நீங்கள் அதனை எந்த வெப்பநிலை மற்றும் நேரத்தை பொறுத்து அமைகிறது.
வைட்டமின் E மற்றும் ஒரு சில B வைட்டமின்கள் வெப்பத்திற்கு உணர்திறன் கொண்டிருப்பதால் அவை வறுத்தல் செயல்முறையின் போது அழிக்கப்படுகிறது. நட்ஸ் மற்றும் விதைகளை வறுக்கும் பொழுது அதில் உள்ள மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிலையாக இருக்கும்.
ஆனால் அதே நேரத்தில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து தீங்கு விளைவிக்கும் பொருட்களை உருவாக்குகிறது. அவற்றை அதிக அளவில் சாப்பிடும் பொழுது அதனால் புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் ஏராளம் உண்டு.