நீங்க ரிஷப ராசியில் பிறந்தவரா? அப்போ மே மாதத்தில் ராஜ வாழ்க்கை உறுதி.. இந்த விடயத்தில் ஜாக்கிரதை!
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது கிரக நிலைகளுக்கு ஏற்ப அவர்களின் வாழ்வில் பல்வேறு விடயங்களிலும் நேரடியாகவே தொடர்புப்படுவதாக நம்பப்படுகின்றது.
அதனால் ராசிபலன் மீது ஆர்வம் மற்றும் அதிக நம்பிக்கை கொண்டவர்கள் புதிய மாதம் ஆரம்பித்தவுடன், அந்த மாதத்துக்கான ராசிபலனை தெரிந்துக்கொள்வதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள்.

அந்தவையில், மே மாதம் ரிஷப ராசியினருக்கு தொழில், நிதி நிலை, தனிப்பட்ட வாழ்க்கை என எவ்வாறான சாதக பாதக பலன்களை கொடுக்கப்போகின்றது என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ரிஷபத்துக்கான மே மாத பலன்கள்
காதல், அழகு மற்றும் ஆடம்பரத்தின் கிரகமாக அறியப்படும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த ரிஷப ராசியினர் இயல்பாகவே மற்றவர்களை நொடியில் வசீகரிக்கும் முக அழகும் காந்தம் போல் ஈர்க்கும் பார்வையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
நேர்மையான குணத்துக்கும் விசுவாசத்துக்கு பெயர் பெற்றவர்களாக திகழும் இந்த ராசியிருக்கு மே மாதம் பொருளாதார ரீதியில் பாரியளவில் ஏற்றம் இருக்கும்.

இந்த மாதத்தில் எதை தொட்டாலும் லாபமாக இருக்கப்போகின்றது. புதிய தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என காத்திருந்தவர்களுக்கு கைக்கு மேல் வாய்ப்புகள் குவிய ஆரம்பிக்கும்.
சொத்துக்கள் வாங்குவது, பணத்தை சேமிப்பது என இந்த மாதம் முழுவதும் நிதி ரீதியில் உச்சகட்ட பலன் 12 ராசிகளில் ரிஷபத்துக்கு தான் சிறப்பாக இருக்கின்றது.குறிப்பாக இந்த மாதம் குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சிகரமான மங்கள நிகழ்வு இடம்பெறும் பிராப்பதம் உண்டு.

ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய விடயம்
இந்த மாதத்தில் நம்பிக்கை துரோகத்தால் மன அழுத்தத“்தை அனுபவிக்கும் நிலை உருவாகலாம். எனவே யார் மீதும் கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்காதீர்கள்.
உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளை அனுபவிக்க இதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
இவர்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும் அதனால் உறவினர்கள் கடன் கேட்டு அல்லது உதவி கேட்டு அதிக செலவீணங்களை ஏற்படுத்த வாய்புள்ளது. எனவே நிதி சார்ந்த விடயங்களை சற்று ரகசியமாக வைத்திருப்பது நல்லது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |