காது இரைச்சலை அசட்டை பண்ண வேண்டாம்! பாரிய பிரச்சினை கூட எழும்
மனித உடல் பாகங்கள் அனைத்துமே அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒவ்வொரு உறுப்புக்குமே ஒவ்வொரு தனிச்சிறப்பு உண்டு. அதில் ஒரு உறுப்பு தனது செயற்பாட்டை நிறுத்தினாலும் அது நமக்கு பாரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும்.
குறிப்பாக, நாம் காதுகளை எடுத்துக் கொண்டோமானால், அது கேட்கும் திறனை வழங்குகிறது. அதுமாத்திரமின்றி காதுகளில் ஏற்படும் பிரச்சினையானது, நம் உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புபட்டது.
காதுகளில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகள் என்னவெனில், காதுகளில் அழுக்குகள் சேர்தல், காது இரைச்சல், காதுக்குள் குத்தல் ஏற்படுதல் போன்றன.
அதிலும் காது இரைச்சல் என்பது தீவிரமான ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். இவ்வாறு காதில் ஏற்படும் சத்தம் என்னென்ன நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் எனப் பார்ப்போம்.
நரம்பு கோளாறுகள்
செவிகளில் கேட்கும் ஒலியானது, இரத்த நாளங்களின் சுவர்களில் அதிகமான தாக்கத்தை செலுத்துவதால் குறிப்பிட்ட அந்த நபருக்கு உயர் இரத்த அழுத்தம், பிளேக் நோய்கள், இரத்த நாளங்கள் கடினப்படுத்தல், இரத்த நாளங்களின் வீக்கம் போன்றவை ஏற்படுகின்றன.
கட்டிகள்
காதுக்குள் கேட்கும் இரைச்சல் போன்ற சத்தம் மண்டையோட்டின் கட்டியின் வளர்ச்சியாகவும் இருக்கலாம். கட்டிகள் வளரும்போது அவை காதுக்குள் ஒருவித ஒலியை ஏற்படுத்துகிறது. இதனால் காது கேட்காமல் போகக்கூட வாய்ப்பிருக்கிறது.
தைராய்டு கோளாறுகள்
தைராய்டினால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதமானோர் காது இரைச்சல் பிரச்சினையை அனுபவிப்பதாகவும் தகுந்த நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் கேட்கும் திறன் பாதிக்கக்கூடும்.
எலும்பு வளர்ச்சி
செவியின் மையப்பகுதியில் உள்ள எலும்பின் அசாதாரண வளர்ச்சி காது கேளாமைக்கு வழிவகுக்கும்.