நீரில் ஊற வைத்த பாதாமை இந்த நேரத்தில் சாப்பிடுங்க! தாறுமாறான பலனைக் காணலாம்
பாதாம் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ள ஒருவகையான கொட்டை வகையை சேர்ந்ததாகும். இவற்றினை எவ்வாறு சாப்பிடுவது? எந்த நேரத்தில் சாப்பிடுவது? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பாதாம்
எண்ணற்ற சத்துக்கள் அடங்கிய பாதாமில் தேவையான நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் நிறைந்துள்ளதுடன், பல ஆரோக்கிய நன்மையினையும் அள்ளிக் கொடுக்கின்றது.
பாதாமில் தோலில் “பைட்டிக் அமிலம்” உள்ளிட்ட சில நுண்பொருட்கள் காணப்படுகின்றது. இவை இரைப்பைக் கோளாறுகள், சத்துக்களை உடல் ஈர்ப்பதில் சிக்கல் உள்ளிட்ட செரிமானச்சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் தோல் நீக்கியே சாப்பிட வேண்டும்.
கெட்ட கொழுப்பினை குறைத்து நல்ல கொழுப்பினை அதிகரிப்பதுடன், செரிமான பிரச்சினையையும் தீர்க்கின்றது.
ரத்த அழுத்தத்தினை குறைப்பதுடன், ரத்தத்தில் சர்க்கரையின் அளவினையும் கட்டுக்குள் வைக்கின்றது.
கருவளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் இவற்றினை கர்ப்பிணி பெண்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
எப்பொழுது பாதாமை சாப்பிட வேண்டும்?
தினமும் இருபது முதல் இருபத்தைந்து பாதாம் பருப்பினை எடுத்துக்கொள்ளலாம்.
இதனை இரவில் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் தோல் நீக்கி சாப்பிட்டால், அனைத்து சத்துக்களும் உடம்பில் சேர்வதோடு, உடல்நிலை ஆரோக்கியத்துடன், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
உணவு சாப்பிட்ட உடனே சாப்பிடாமல், சிறிது நேரம் கழித்து எடுத்துக் கொள்ளலாம். இடைப்பட்ட நேரங்களில் பசி எடுக்கும் போது இவற்றினை எடுத்துக்கொள்ளலாம்.