Eye Pressure: கண் சோர்வினால் அவதியா? இனி இந்த தவறை செய்யாதீங்க
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண் சோர்வினால் அவதிப்படுகின்றனர். இதற்கு நாம் சில தவறுகளை செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
கண் சோர்வு
இன்றைய நவீன காலத்தில் அனைத்து தரப்பினர் கையிலும் செல்போன், ஐ பேட் என அனைத்தும் வந்துவிட்டது. கையளவில் சிறியதாக இருந்தாலும் இதன் பாதிப்பு பாரியதாக இருக்கின்றது.
அதுவும் முக்கியமாக பாதிப்பை ஏற்படுத்தும் பகுதி என்றால் அவை கண்கள்தான். ஆம் மன அழுத்தம், ரத்த அழுத்தம் பற்றி தெரிந்திருக்கும் நமக்கு கண் அழுத்தம் குறித்து நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.
நம்மை பொறுத்தவரை கண்கள் தெரிந்தால் போதும், ஆனால் அதை முறையாக பராமரிக்கிறோமா என்றால் இல்லை என்பது தான் பெரும்பாலான நபர்களின் பதிலாக இருக்கும்.
சாதாரணமாக ஒரு நிமிடத்திற்கு 16 முதல் 20 முறை வரை கண் இமைகள் மூடி திறக்கும். அதுவே ஒரு புத்தகம் படிக்கும்போதோ அல்லது டிவி, மொபைல் பார்க்கும்போதோ ஒரு நிமிடத்திற்கு ஒன்றிலிருந்து இரண்டு முறைதான் அவை திறந்து மூடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த தவறை செய்யாதீங்க
20-20-20 என்ற பயிற்சியை நீங்கள் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். அதாவது நீங்கள் மொபைல், கணினியில் இருக்கும் போது 20 நிமிடத்திற்கு ஒருமுறை 20 அடி தூரத்தில் இருக்கும் பொருளை 20 நொடிகளுக்கு பார்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் கண்களில் வறட்சி இல்லாமல் இருக்கும்.
இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை 15 நிமிடம் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். ஒரே இடத்தில் அமராமல், சற்று இடைவெளிக்கு பின்பு அமர்ந்து வேலை பார்க்கவும்.
நீங்கள் பயன்படுத்தும் அறையில் நல்ல வெளிச்சம் நிறைந்த மின்விளக்குகளை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் கண்கள் சிரமமின்றி பார்க்க அல்லது படிக்க வேண்டியவற்றை பார்த்து கொள்ளும்.
நீங்கள் கையில் வைத்து பாவிக்கும் டிவைஸின் ஸ்கிரீனை ஒரு கை அளவு தூரத்தில் இருக்குமாறு பார்க்க வேண்டும். மேலும் கண் பார்வைக்கு 10 டிகிரி கீழே ஸ்கிரீன் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
எழுத்துக்களை சற்று பெரிய எழுத்துக்களாக வைத்து படிக்கவோ, பார்க்கவோ செய்யுங்கள். ஸ்கிரீனின் அளவை அதிகரித்துக்கொள்ளவும்.
சரியான இடத்தில் அமர்ந்திருப்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள். கழுத்து, இடுப்பு, கண்களுக்கு சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |