வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாக இருக்கின்றதா? இதை செய்தால் போதும்
வீட்டு சமையலறையில் அதிக தொல்லை கொடுக்கும் கரப்பான் பூச்சியை அடியோடு அழிப்பதற்கு சில வீட்டு வைத்தியம் என்ன என்பதை பார்க்கலாம்.
நோய்களை உருவாக்குவதில் கரப்பான் பூச்சியின் பங்கு அதிகமாகவே இருக்கின்றது. கழிவறை, பாத்திரம் தேய்க்கும் இடம், சமைத்த உணவு என எங்கும் உலா வந்து முகம்சுழிக்க வைக்கும் கரப்பான் பூச்சி.
கரப்பான் பூச்சியை எவ்வாறு விரட்டலாம்?
பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை இவற்றினை கலந்து உருண்டையாக உருட்டி கரப்பான் பூச்சி அதிகம் நடமாடும் இடத்தில் வைக்கவும்.
வேப்பெண்ணெய்யை தண்ணீரில் கலந்து ஸ்பிரே பாட்டில் ஒன்றில் ஊற்றி தூங்கும் முன்பு சமையல் அறையில் தெளித்துவிட்டால் கரப்பான் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
பெப்பர்மிண்ட் ஆயிலை உப்பு கலந்த தண்ணீருடன் கலந்து கரப்பான் மறைந்திருக்கும் இடத்தில் அடிக்கவும்.
பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் பிரியாணி இலையை நீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை கரப்பான் பூச்சி இருக்கும் இடத்தில் தெளித்துவிட்டால் கரப்பான் தொல்லை இருக்காது.
போரிக் ஆசிட் வேகமாக செயல்பட்டு கரப்பான் பூச்சியை அழிக்கும். ஆம் கரப்பான் பூச்சி இருக்கும் இடத்தில் இதனை தூவி விட்டால் உடனே கரப்பான் பூச்சி இறந்துவிடும். ஆனால் குழந்தைகள், செல்லப்பிராணிகள் இவற்றிற்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.