ரிச்சர்ட்- யாஷிகா காதல் விவகாரம்: உண்மையை உடைத்த யாஷிகாவின் அம்மா
சமூக வலைத்தளத்தை திறந்தாலோ தற்போது ரிச்சர்ட், யாஷிகா காதல் விடயம்தான் ஹொட் டொபிக். ரிச்சர்ட் ரிஷி சிறுவயதிலிருந்தே தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் ரிச்சர்ட் ரிஷி அண்மையில் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள புகைப்படமானது, பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
இவ்வாறான கருத்துக்களுக்கும் வதந்திகளுக்கும் ரிச்சர்ட்டும் யாஷிகாவும் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காத நிலையில், இந்த விடயம் குறித்து யாஷிகாவின் தாயார் கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது, “யாஷிகாவும் ரிச்சர்ட்டும் காதலிக்கிறார்கள் என்று கூறுவதில் எந்தவித உண்மையுமில்லை. அவர்கள் இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படமானது, அவர்கள் இருவரும் அடுத்து நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் புகைப்படங்கள்தான்.
அந்தத் திரைப்படம் ரிலீஸாகும்போது, அனைவருக்கும் உண்மை தெரியவரும் எனக் கூறினார்கள். எனவே இதை வைத்துப் பார்க்கும்போது இது வெறும் வதந்தி என்பது புரிகிறது.