வீட்டில் காபி குடித்துக்கொண்டிருந்த நபருக்கு வந்த மின்னஞ்சல்! நிமிஷத்தில் அதிர்ஷ்டமாக மாறிய வாழ்க்கை
நபர் ஒருவர் காபி குடித்துக் கொண்டிருக்கும் போது வந்த மின்னஞ்சல் மூலமாக நபரின் வாழ்க்கையே அதிர்ஷ்டமாக மாறியுளளது.
காபி குடித்த நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்
கனடாவின் Oakville என்னும் பகுதியைச் சேர்ந்தவர் Richard Noronha(51). இவர் சுகாதார துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பாக, தனது வீட்டிலிருந்து காபி குடித்தக் கொண்டிருந்தார்.
அச்சமயத்தில், ரிச்சர்டிற்கு இ மெயில் ஒன்று வந்துள்ளது. காபி குடித்த படி, அதனை திறந்து பார்த்த ரிச்சர்ட், அப்படியே ஒரு நிமிடம் மகிழ்ச்சியில் உறைந்து போயுள்ளார்.
இதற்கு காரணம், லாட்டரி நிறுவனம் ஒன்றில் இருந்து வந்த அந்த மெயிலில், 1,29,754 டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 79 லட்ச ரூபாய்க்கு மேல்) ரிச்சர்ட் வென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மகிழ்ச்சியில் நபர்
இந்த சம்பவம் பற்றி பேசும் ரிச்சர்ட், இத்தனை பெரிய தொகை தனக்கு லாட்டரியில் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும், பரிசு பணத்தை கொண்டு தானும், தனது மனைவியும் சேர்ந்து தொண்டு நிறுவனத்திற்கு பெரிய அளவில் நன்கொடை கொடுக்க திட்டம் போட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனக்கு லாட்டரியில் பணம் கிடைத்ததை கொண்டாடும் விதமாக, தனது குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரு நல்ல இரவு நேர விருந்து அளிக்க உள்ளதாகவும் ரிச்சர்ட் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காபி குடிக்கும் நேரத்தில் வந்த மெயிலால், ஒருவரின் வாழ்க்கையை அப்படியே திருப்பி போட்டுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.