17 ஆம் நூற்றாண்டில் கொடிக்கட்டி பறந்த அந்த உணவு.. எப்படி செய்றாங்க தெரியுமா?
17-ஆம் நூற்றாண்டில் முக்கிய பேரரசராக இருந்த முகலாயப் பேரரசால் பண்டிகை காலத்தில் செய்யப்படும் இனிப்பு வகைகளில் ஒன்று தான் கிமாமி சேமியா அல்லது கிவாவி சேமியா.
இந்த உணவை ஈத் பெருநாளான ரம்ஜான் அன்று செய்து சாப்பிட்டு வந்தனர்.
இவ்வளவு பழமை வாய்ந்த ரெசிபியை எவ்வாறு இலகுவாக செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சேமியா- 200 கிராம்
- சர்க்கரை- 200 கிராம்
- நெய்- 50 கிராம்
- ஏலக்காய் தூள்- ஒரு கரண்டி
- முந்திரி, ஏலக்காய், பிஸ்தா தேங்காய்- ஒரு கரண்டி
- திராட்சை- ஒரு கரண்டி
- பால்கோவா- 100 கிராம்
சேமியா செய்முறை
முதலில் கடாயை அடுப்பில் வைத்து அதில் முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, ஆகியவற்றை ஒன்றாக போட்டு வறுத்தெடுக்கவும்.
அதே கடாயில் தேங்காய் துண்டுகள், சேமியா இவை இரண்டையும் தனித்தனியாக போட்டு வறுத்தெடுக்கவும்.
இது ஒரு புறம் இருக்கையில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடாய் நிறைய தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
நீர் கொதித்து கொண்டிருக்கும் பொழுது அதில் வறுத்து வைத்திருக்கும் பொருட்களை ஒன்றாக கொட்டி கிளறவும். சிறிது நேரத்திற்கு பின்னர் சேமியாவையும் கொட்டி கிளறவும்.
கலவை கொஞ்சம் கெட்டியானதும் பால்கோவா சேர்த்து இறக்கினால் சுவையான இனிப்பான கிமாமி சேமியா தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |