இடுப்பிற்கு கீழ் வரை முடி வளர வேண்டுமா? அரிசி கழுவிய தண்ணீரை இப்படி பயன்படுத்துங்க
பொதுவாக பெண்களுக்கு நீண்ட கூந்தல் இருந்தால் தான் பெண்களின் அழகு பல மடங்கு அதிகரிக்கும் என்பார்கள்.
முந்தைய காலந்தொட்டே பெண்கள் கருமையான, அடர்த்தியான தலைமுடியைப் வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதனால் தான் எமது வீடுகளில் இருக்கும் மூதாதையர்கள் சில டிப்ஸ்களை கொடுத்து இதனை தினமும் செய்யுமாறு நச்சரித்துக் கொண்டே இருப்பார்கள்.
ஆனால் நமக்கு தற்போது இருக்கும் இரசாயனப் பொருட்களை வாங்கி பாவணை செய்வோம். அதிலிருந்து வரும் பலன்கள் நீண்டக்காலம் இருக்காது என சிறிது காலத்திற்கு பின்னர் தான் விளங்கும்.
அந்த வகையில் வீட்டில் சமைக்கும் போது பெறப்படும் கழிவு நீரான அரிசி கழுவிய தண்ணீரை, வைத்து எவ்வாறு தலைமுடி வளர்ச்சியடைய வைப்பது என்பது தொடர்பில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- அரிசி - சமைக்க தேவையான அளவு
- தண்ணீர்- கழுவிய பின்னர் கிடைக்கும் அளவு
- பவுல் - 1
செய்முறை
பொதுவாக நாம் அரிசியை சமைப்பதற்கு முன்னர் ஒரு 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் நன்றாக அரிசியில் இருக்கும் தண்ணீரை கொண்டு கழுவிக் கொள்ளவும்.
இவ்வாறு கழுவும் போது கைகளில் இருக்கும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள், அரிசி நீருடன் வினை புரிந்து ‘நொதித்தல்’ செயற்பாட்டில் இறங்குகிறது.
தற்போது சமைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் வைத்து அடுப்பில் வைத்து விட வேண்டும்.
பயன்படுத்தும் முறை
நன்றாக சாம்பூ போட்டு குளித்த பின்னர், இந்த தண்ணீரை தலைமுடிக்கு மட்டும் படும் வகையில் போட்டு அலச வேண்டும்.
பின்னர் சுமார் 10- 15 நிமிடங்கள் வேர் முதல் நுனி வரை மென்மையாக தலையை மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது அரிசி கழுவிய தண்ணீரில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள், அன்டி அக்சிடண்டுகள், தாதுக்கள், விட்டமின் பி மற்றும் ஈ ஆகிய ஊட்டசத்துக்கள் தலைக்கு இறங்கும்.
இவ்வாறு செய்த பின்னர் சுத்தமான நீரால் தலையை நன்றாக கழுவ வேண்டும். இந்த முறைப்படி தலையை வாரத்திற்கு மூன்று தடவைகள் சரி கழுவ வேண்டும்.