மீதமான சாதத்தினை வெளியே கொட்டுபவரா நீங்கள்? ஈஸியான ஸ்நாக்ஸ் செய்யலாம்
பொதுவாகவே வீட்டில் மிச்சமான சாதம் இருந்தால் அம்மா புதிதாக எதாவது செய்து கொடுப்பது வழக்கம்.
இன்றும் உங்கள் வீட்டில் மிச்சமான சாதம் இருந்தால் குளிர்க்காலத்தில் மாலை நேர ஸ்நாக்ஸாக செய்து சாப்பிடலாம். அதை எவ்வாறு செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சாதம் - 2 கப்
- கடலைமாவு - 1 கப்
- கார்ன் பிளார்-2 ஸ்பூன்
- இஞ்சி- 1 துண்டு
- பச்சைமிளகாய் - 2
- வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - 1
- கொத்தமல்லித்தழை -கையளவு
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், மற்றும் மல்லித்தழை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பாத்திரத்தில் சாதத்தை சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் கடலைமாவு மற்றும் கார்ன் பிளார் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுத்து அதில் பொடியாக அரிந்து வைத்த வெங்காயம் சேர்த்து கிளறி விட்டு பின் அதில் அரிந்து வைத்துள்ள இஞ்சி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பச்சைமிளகாய், மல்லித்தழை சேர்த்து கிளறி விட்டு இறுதியாக பொடியாக அரிந்த கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பின்பு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைத்ததன் பின் கொதிக்கும் எண்ணெய்யில் பக்கோடா போன்ற வடிவத்தில் போட்டு குறைந்த அடுப்பில் வைத்து கொள்ள வேண்டும்.
பக்கோடா பொன்னிறமாக மாறியவுடன் மறு பக்கம் திருப்பி போட்டு எடுக்க வேண்டும்.
அவ்வளவு தான் சுவையான, சூடான பக்கோடா ரெடி.