வீட்டில் அரிசி மாவு இருக்கா? அப்போ செட்டிநாடு வெள்ளை ஆப்பம் செய்து பாருங்க
காலை உணவு என்பது அன்றைய நாளின் மிக முக்கியமான உணவாகக் கருதப்படுகிறது. பல ஆய்வுகளில் இது சரியானதாக கூறப்படுகிறது.இரவில் அதிக ஆற்றல், புரதம் மற்றும் கால்சியம் பயன்படுத்துகிறது.
அந்த வகையில் காலையில் எழுந்தவுடன் புரதம், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்கும்.
அன்றைய நாள் முழுக்க உட்சாகத்துடன் தொடங்க காலை உணவை எடுப்பது அவசியம்.அந்த வகையில் வீட்டில் அரிமா இருந்தால் செட்டிநாடு வெள்ளை ஆப்பம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி – 1 டம்பளர்
- உளுந்து – கால் கப்
- அரை டீஸ்பூன் உப்பு
- அரை டீஸ்பூன் சர்க்கரை
- எண்ணெய் பொறிக்கும் அளவு
செய்யும் முறை
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, உளுந்தை எடுத்துகொள்ளவும். இதை 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இதன் பின்னர் ஒரு மிக்ஸியில் தோசை மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் அரை டீஸ்பூன் உப்பு, சர்க்கரை சேர்த்துகொள்ளவும். பின்னர் வேறொரு பாத்திரத்தில் எண்ணெய்யை கொதிக்க வைக்கவும்.
எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும்போது மாவை ஊற்றி பொறித்து எடுக்கவும். இப்படி செய்து எடுத்தால் சுவையான செட்டிநாடு வெள்ளை ஆப்பம் தயார்.
இதை உங்களுக்கு பிடி்தவாறு சாம்பார் சட்னி எதனுடனும் வைத்து உண்ணலாம். காலையில் வேலைக்கு செல்பவர்கள் பாடசாலை செல்பவர்கள் என அனைவருக்கும் இது ஒரு சிறந்த உணவாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |